×

திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பிப். 11ம் தேதி கும்பாபிஷேகம்: திருப்பணிகளை அமைச்சர் ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள ெதர்பாரண்யேஸ்வரர் கோயில்  உலக புகழ்பெற்றது. இக்கோயிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். அண்மையில் ெதர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் அதன் சுற்று கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யும் பொருட்டு திருப்பணிகள் தொடங்கியது. இப்பணிகளை புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், சப்கலெக்டரும் கோயில்கள் நிர்வாக அதிகாரியுமான

விக்ராந்ராஜாவுடன் நேரில் சென்று  ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  வரும் ஜனவரி 27ம் தேதி ெதர்பாரண்யேஸ்வரர் கோயிலை சார்ந்த சுற்று கோயில்களுக்கும், பிப்ரவரி 11ம் தேதி ெதர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு அனைத்து  கோயில்களிலும் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. குறிப்பாக ெதர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி விக்ராந்த்ராஜா மற்றும் ஊழியர்களால் திருப்பணி பணிகள் மிகவும் திருப்திகரமாக உள்ளது.  இதற்காக ரூ.1.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்றரை கோடி ரூபாய் கோயில் நிதியில் இருந்து எடுக்காமல், கோயிலுக்கு வரும் பக்தர்களிடமிருந்து நன்கொடையாக பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கோயில் சிலைகள், கல்வெட்டுகள் பாதிக்காத வகையில், பழமை மாறாமல், ஆகமவிதிகள்படி வேலைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட தேதியில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறும் என்றார்.  ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் கோயில் ஊழியர்கள் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirunallur Satyapuri Temple Kumbabhishekam , Tirunallar Saturn Temple, Kumbabhishekam, Thirunavu, Minister
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...